அருங்கனியைப் பெறவேண்டி அவனியை வலம் சுற்ற
ஆறுமுகன் மயிலேறவும்,
இவ்வுலகம் அசைவதே இறைவனின் இயக்கமெனில்
ஈன்றோரே உலகம் என்று
உயர்ந்ததோர் உண்மையை உயிர் கொடுத்தோர் பெருமையை
ஊருக்கெல்லாம் உணர்த்திடவே
எந்தையுந்தாயுமே என் உலகென வலம் வந்த
ஏகதந்தா கஜமுகா!
ஐங்கரத்தெய்வமே!என் ஐயங்களை நீக்க
ஒருமுறைதான் வந்தருள்வாய்;
ஓம்கார வடிவமே ஓயாத துயர்களுக்கு
ஔடதம்தான் தந்திடுவாய்;
அக்ஞானம் நீக்கிடுவாய் அஹ்தே யான் வேண்டுவதே.