Showing posts with label bakthi paadalgal. Show all posts
Showing posts with label bakthi paadalgal. Show all posts

Thursday, February 17, 2011

திருக்கடவூர் திகழ் அபிராமி !


பருவங்களும் காலம் மாறிடுமே,-நீ
புருவத்தைச் சிறிதே உயர்த்திடினும்!
துருவங்களும் திசை மாறிடுமே -உன்
குறுநகையால் அதர மொட்டவிழ்ந்தால்!(திருக்கடவூர்...)

சுந்தரியே உந்தன் தோளிலொரு கிளி
சொந்தம்போல் சுகமாய்க் குந்திடக்கண்டென்
சிந்தையிலே அழுக்காறு பெருகுதடி!
அந்த நிலை எனக்கும் தந்து அருள் புரி!(திருக்கடவூர்..)

அன்னையே! உந்தன்  கழுத்தினை அணைத்து
கன்னலும் 'தாய்சுகம்' காண்கிறதே!-நான்
அந்நியனோ? நீயென் மாற்றாந்தாயோ?
என்னுயிருன்மேல் சாய்வதென்றோ  தாயே?(திருக்கடவூர்...)

Thursday, October 21, 2010

ஐங்கரனின் பதம்பணிவோம் (மெட்டு - ஸ்ரீகணநாத)

1)பூங்கணை   ஐந்தும்  கரும்புச்சிலையும்               
தாங்குந்தாய்  அபிராமி  தனயன்                       
ஐங்கரனின் பதம்பணிவோம்
சங்கரனின்  செல்லபிள்ளையாம்
ஐங்கரனின் பதம்பணிவோம்
2)லம்போதரன் ,குகசொதரன்
உம்பரும் வணங்கும் விக்னேஸ்வரன்
தும்பிக்கையான் தாள்தொழுவோம்
கொம்பால் மகாபாரதம் எழுதிய
தும்பிக்கையான் தாள்தொழுவோம்
Lord Ganesh Wallpapers: lord ganesha8
3)நாரணன் கைச்சக்கரம் விழுங்கி
தோர்பிக்கரணம் போடவைத்த
வாரணா நனனை  வழிபடுவோம்
பூரணகொழுகட்டைபிரியன்
வாரணா நனனை  வழிபடுவோம்

Tuesday, October 19, 2010

அம்மனை அலங்கரிப்போம் (மெட்டு- ஹிந்திப்பாட்டு -குங்குரூகிதராஹ் )

            
        அம்மன்மேனியை நாம் அழகாய் அலங்காரம் செய்வோம்
நவராத்திரியில் தாயை சிங்காரம் செய்வோம்
      மூன்றுநாள் துர்க்கையாய் , மூன்றுநாள் லக்ஷ்மியாய்
மூன்றுநாள் சரஸ்வதியாய் துதித்திடுவோம் ( அம்மன்மேனியை....)

1 ) செங்கரும்புவில்லும்  பூங்கணைகள் ஐந்தும்
       அங்குசபாசமும் தாங்கும் மங்கையவள்
சங்கரன்மேனியில் ஒருபங்கானவள்
     சங்குசக்கரபாணி யின் தங்கையாம்..(அம்மன்மேனியை ...)

2 )    பக்தன்சொன்ன சொல்லை மெய்யாக்கிடவே
              தன் தாடங்கத்தை விண்ணில்  விட்டெறிந்தே
       அம்மாவாசைவானில் முழுநிலா காட்டிய
              அன்னை அபிராமவல்லியின் அருள்பெறவே ..(அம்மன்மேனியை...)

3 ) அன்னபூரணியாம் அவள்காசியிலே
        கற்பகாம்பிகையாம் அவள் மயிலையிலே
மதுரைமீனாக்ஷியாய் காஞ்சிகாமாக்ஷியாய்
      நாகைநீலாயதாக்ஷியாய் அருள்புரியும் ...(அம்மன்மேனியை...)

Sunday, October 17, 2010

தரிசனம்

அம்பா காமாட்சி உன் குமிழ்வாயில் குறுநகை
தரிசனம் கனவுதானோ ?
செம்பவழக்குவியலில் முத்தும் முகிழ்ந்ததோ?
விந்தையோ?உண்மைதானோ?
குங்குமப்பூங்கோத்தில் தும்பையும் பூத்ததோ?
கற்பனைக்கொலந்தானோ?
மங்களசெவ்வாயில் திங்கள் உதித்ததோ?
மந்திரஜாலந்தானோ?

 நின்கரம் ஒன்றிலே கரும்பேந்தி இனிமையைக் கரும்பிலே  கூட்டிவைத்தாய்
மென்கரம் ஒன்றிலே மலரேந்தி மென்மையைமலர்களில்   ஏற்றிவைத்தாய்
உன்சிரம்  தாங்கிடும் வெண்ணிலாதன்னில் உன்   தண்ணொளி  தேக்கிவைத்தாய்
என்மனப்பிதற்றல்  உன்  பொற்பதம்  தொட்டதும் பாடலாய்  ஆக்கிவைத்தாய்

அம்மன் பாட்டு (மெட்டு-அத்தை மடி மெத்தையடி )

பொம்மைகொலு வைத்திடுவோம் அம்மனை அழைத்திடுவோம்
தேமதுர தமிழினிலே பாமாலை சூட்டிடுவோம்
நம்மதாயே...துர்கா,லக்ஷ்மி,சரஸ்வதியாக வந்திடுவாள்
நமக்கெல்லாம்...வீரம்,செல்வம்,ஞானம் யாவும் தந்திடுவாள்

1) மூன்றிரவு துர்காதேவியாக்கி
சிங்கத்திலவளை ஏற்றிவைப்போம்
துஷ்டரை வெல்லும் திறம்தருவாள்
தாயாய் அவள்நம்மை காத்திடுவாள்...பெற்ற
தாயாய் அவள்நம்மை காத்திடுவாள்

2)மூன்றிரவு மகாலக்ஷ்மியாக்கி
தாமரைபூவினில் ஏற்றிவைப்போம்
பொருள்வளம் பொங்க அருள்புரிவாள்
அள்ளிதரும்வள்ளல் ஆக்கிடுவாள்.. நம்மை
அள்ளித்தரும் வள்ளலாக்கிடுவாள்

3)மூன்றிரவு கையில் வீணைதந்து
அன்னையை சரச்வதியாக்கிடுவோம்
வித்யையும் வினயமும் ஊட்டிடுவாள்
பக்குவஞானியாய் ஆக்கிடுவாள் ..நம்மை
பக்குவஞானியாய் ஆக்கிடுவாள்

Thursday, September 16, 2010

விநாயகர் துதி

                                    



அருங்கனியைப் பெறவேண்டி அவனியை  வலம் சுற்ற

ஆறுமுகன் மயிலேறவும்,

இவ்வுலகம் அசைவதே இறைவனின் இயக்கமெனில்

ஈன்றோரே உலகம் என்று

உயர்ந்ததோர் உண்மையை உயிர் கொடுத்தோர் பெருமையை

ஊருக்கெல்லாம் உணர்த்திடவே

எந்தையுந்தாயுமே என் உலகென வலம் வந்த

ஏகதந்தா கஜமுகா!

ஐங்கரத்தெய்வமே!என் ஐயங்களை நீக்க

ஒருமுறைதான் வந்தருள்வாய்;

ஓம்கார வடிவமே ஓயாத துயர்களுக்கு

ஔடதம்தான் தந்திடுவாய்;

அக்ஞானம் நீக்கிடுவாய் அஹ்தே யான் வேண்டுவதே.